டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டுள்ளது.

369

டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா அறிக்கை தாக்கல் செய்தார். இந்த சம்பவம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரனின் மாமியாரும், சசிகலாவின் அண்ணியுமான சந்தானலட்சுமி மாரடைப்பால் காலமானார். இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சசிகலா, 5 நாட்கள் பரோல் கேட்டு மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இறந்தவர் சசிகலாவின் ரத்த சொந்தம் இல்லை என்பதால், பரோல் மறுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.