அதிமுக அம்மா அணியின் சார்பில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

254

அதிமுக அம்மா அணியின் சார்பில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
அதன்படி, பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடச்சாலாம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜக்கையன், மேலூர் சாமி, சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி, மனோகரன், சேலஞ்சர் துரை உள்ளிட்டவரையும் நியமித்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொள்கைப் பரப்பு செயலாளராக நாஞ்சில் சம்பத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக அம்மா அணியில், மேலும் சிறப்பாக செயல்படவும், இயக்கத்தை வலுப்படுத்தவே கூடுதல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.