ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டி.ஆர்.எஸ் முறையை கொண்டு வர பிசிசிஐ முடிவு…!

392

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறையை கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஐபிஎஸ், தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறையை கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சர்வதேச கிரிக்கெட் தொடர்களில், டி.ஆர்.எஸ் முறை அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.