சட்டப்பேரவையில் நம்பிக்கைத் தீர்மானம் மீது விவாதம்..!

159

கர்நாடக அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாகவும், குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாகவும் முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 16பேர் பதவி விலகல் கடிதம் அளித்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் குமாரசாமி, மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தால் அதற்கு பாஜக தான் முழுப் பொறுப்பு எனக் குறிப்பிட்டார். ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஜனநாயகத்தையும் சட்டப்பேரவைத் தலைவரின் மாண்மையும் காக்கத் தனது அரசு விரும்புவதாகக் குமாரசாமி தெரிவித்தார்.