புத்தாண்டையொட்டி, திருப்பதியில் நாளை அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

117

புத்தாண்டையொட்டி, திருப்பதியில் நாளை அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி திருமலையில், புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி வரை மார்கழி மாத பூஜைகள் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிகாலை நான்கரை மணிமுதல் , பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவஸ்தான நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்றும், நாளையும். பக்தர்கள்கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அனைத்து ஆர்ஜித சேவைகளும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து முன்னுரிமை தரிசனங்களும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.