அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு வாழ்த்து ..!

3876

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் சார்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் ஜே.சல்லிவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி, செழுமை உள்ளிட்டவை தழைத்திட வேண்டுவதாக தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் அனைவருக்கும் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.