வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், டிரம்ப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல முடிவு..!

207

அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.இந்த சந்திப்பின்போது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் உன்னும் அழைத்துள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.