அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தைமுறைப்படி தொடங்கினார் டிரம்ப்

155

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி துவங்கியுள்ளார். அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைவதை ஒட்டி ,2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார் .இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி துவங்கியுள்ளார் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் பிரசாரத்தை துவங்கிய ட்ரம்ப்,அமெரிக்கா மெக்சிக்கோ எல்லையில் கட்டப்பட்டு வரும் சுவரை தன் சாதனையாக குறிப்பிட்டார் மேலும் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைவரும் கனவு காணும் புதிய அமெரிக்காவை உருவாக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்