வடகொரியா உட்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா வர தடை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

369

வடகொரிய உட்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர புதிய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதிவியேற்ற உடன் பாதுகாப்பு காரணமாக ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா வர புதிய கட்டுபாடுகள் கொண்ட தடை விதிக்கப்பட்டது. நேற்றுடன் அந்த தடை காலம் முடிவடைந்தது. இந்நிலையில், மேலும் கடுமையான கட்டுபாடுகள் கொண்ட தடைக்கான அறிக்கையை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில் பாதுகாப்பு காரணத்திற்கா வடகொரியா, வெனிசுலா, சேட், ஈரான், சோமாலிய, சிரியா, உட்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தங்கியிரும் வெளிநாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.