பிரதமர் மோடியைப்போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிமிக்ரி செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..!

627

பிரதமர் மோடியைப்போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மிமிக்ரி செய்து காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் அனைத்து மாகாண ஆளுநர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை மிகச் சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டார்,பின்னர் மோடி அமெரிக்க , இரு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரியை குறைப்பதாக உறுதி அளித்திருந்ததாக தெரிவித்தார். ஆனால் இன்றுவரை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார். இதனை அவர், பிரதமர் மோடி கூறுவது போல தனது கையை பிடித்துக் கொண்டு, மிகவும் தாழ்ந்த, பணிவான குரலில் கூறினார் . இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.