வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து டிரம்ப் கருத்து

278

வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் அமெரிக்காவிற்கு எந்த இடையூறும் இல்லை என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதாகவும், இதனால் அமெரிக்க அதிகாரிகள் சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் வடகொரியா நடத்திய குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் அமெரிக்காவிற்கு எந்த இடையூறும் இல்லை என குறிப்பிட்ட டிரம்ப், கிம் ஜோங் உன் தனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன், 4-நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அந்நாட்டு பிரதமர் ஜின்சோ அபேவை சந்திக்கும் அவர், கொரிய தீபகற்ப விவகாரம், வடகொரியா அணு ஆயுத சோதனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.