அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க எல்லைப்பகுதி வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த அவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து வைக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. உள்நாட்டிலேயே பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்க எல்லைப்பகுதி வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.