சிரியா மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் | அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

150

சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, தாக்குதல் நடத்தினால் துருக்கி மீது பொருளாதார பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவந்த வந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டுமுதல் அமெரிக்க படைகள் சிரியாவுக்கு சென்று, ஐ.எஸ். தீவிரவாத படைகளை ஒடுக்கின. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதனிடையே சிரியாவில் உள்ள உள்ளூர் படைகளான, குர்திஷ் படைகள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து, சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக துருக்கி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.