தன்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் – அதிபர் டிரம்ப்

616

தன்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு நடிகைகளுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் அமெரிக்க தேர்தல் சட்ட விதிமுறைகளை அவர் மீறியதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, டிரம்புக்கு எதிராக தகுதி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் எதிர்கட்சியினர் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி.

நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த டிரம்,இது குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, எனது ஆட்சியில் ஏராளமான வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளேன், பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். மிகச் சிறந்த வேலைகளை செய்தவர் மீது எப்படி பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், என்னை பதவி நீக்கம் செய்தால், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எல்லோரும் ஏழையாகிவிடுவர் எனவும் காரசாரமாக தெரிவித்துள்ளார் .