2 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்….

683

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷிய வழக்கறிஞரை தமது மகன் சந்தித்தது உண்மைதான் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யாவைச் சேர்ந்த கிரெம்ளின் என்ற வழக்கறிஞரை ட்ரம்பின் மகன் சந்தித்துப் பேசியதாக செய்தி வெளியானது. இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த அதிபர் ட்ரம்ப், அந்த சந்திப்பு நடைபெற்றது உண்மை தான் என தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரஷ்ய வழக்கறிஞரை தமது மகன் சந்தித்தது குறித்து வெளியான செய்தியால் தாம் கவலையில் ஆழ்ந்துள்ளதாக ஊடகங்களில் பொய்யான தகவல் வெளியாகி வருவதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவது சட்டபூர்வமானது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.