வடகொரியாவின் அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது – அதிபர் டிரம்ப்

331

வடகொரியாவின் அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் 12ம் தேதி வடகொரிய அதிபர் கிம் – ஜாங் – உன்னுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பிறகு வடகொரியாவில் இருந்து அணுஆயுத அச்சுறுத்தல் இருக்காது என டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு டிரம்ப் அனுப்பியுள்ள பிரகடனத்தில், கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதங்களை பயன்படுத்த தக்க அணுசக்தி மூலப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வடகொரிய அரசின் கொள்கைகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.