இந்தியாவின் நடவடிக்கையை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது..!

188

அமெரிக்க தயாரிப்புகள் மீது தொடர்ந்து வரி விதிக்கும் இந்தியாவின் நடவடிக்கையை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனையடுத்து, 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா, அலுமினியம், எஃகு ஆகியவற்றுக்கான வரிகளை உயர்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இந்தியாவும் உயர்த்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, தொடர்ந்து வரிகளை விதிப்பதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.