ஜஸ்டின் ட்ரூடோ கருத்துக்கு கண்டனம்..!

377

சட்டவிரோத குடியேற்றம் குறித்து விமர்சித்த பெண்ணை நிறவெறி பிடித்தவர் என கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சப்ரிவாய்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய போது, கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோரால் பொருளாதார இழப்பீடு ஏற்படுவதாக முழக்கம் எழுப்பினார். இதையடுத்து மேடையில் இருந்து கீழே இறங்கிய ஜஸ்டின் ட்ரூடோவை வழிமறித்த அந்த பெண், மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது, நிறவெறிக்கு இங்கு இடமில்லை என ட்ரூடோ பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.