திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தணிக்கைத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

344

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தணிக்கைத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தரபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் தங்கம், வெள்ளி உட்பட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்கள் உள்ளன. இந்த கோவிலை நிர்வகிப்பதில் குளறுபடிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவில் சொத்துக்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு முன்னாள் தலைமைக்கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயை உச்சநீதிமன்றம் நியமித்தது. கடந்த ஒரு ஆண்டாக கோவில்களில் உள்ள நகைகளை ஆய்வு செய்த அவர், ஆயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், கோவிலில் இருந்த ஆயிரத்து 988 தங்க பானைகளில், 769 தங்க பானைகள் மாயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றின் எடை 776 கிலோ என்றும், இவற்றின் மதிப்பு 186 கோடி ரூபாய் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் வினோத் ராய் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.