4-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

182

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், நாள்தோறும் அரசு பேருந்துகளில் பயனித்து வந்த ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான பேருந்துகளை அனுபவம் குறைவான தனியார் ஓட்டுனர்கள் இயக்கியதால் பொதுமக்கள் அச்ச உணர்வுடன் அதில் பயணித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் கடந்த மூன்று நாட்களை காட்டிலும் இன்று அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் இந்த பிரச்சனை முழுமையாக சரியாகாத காரணத்தால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.