திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது

269

கார்த்திகை தீப திருநாள் தமிழகம் முழுவதும் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க தீபம் ஏற்றி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அரோகரா என்ற கோஷத்துடன் அண்ணாமலையாரை வழிபட்டனர்.
பழனி முருகன் கோவிலிலும் திருக்கார்த்திகையை முன்னிட்டு மகாதீபம், வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாள் விமரிசையாக கொண்டாப்பட்டது. மலையில் தீபம் ஏற்றப்பட்ட போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் திருக்கார்த்திகை முன்னிட்டு கடற்கரையில் நாராயணி தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிப்பட்டனர்.
ஓசூரில் உள்ள மலைக்கோவிலில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப திருவிழாவில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.