திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை !

510

உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு முதன்முறையாக ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பரணி தீபத்திற்கும், மகா தீபத்திற்கும் 600 ரூபாயில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி கோவிலில் காலை பரணி தீபமும், மாலை மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.