திருவண்ணாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கான சிறப்பு அபிஷேசம்!

425

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருவண்ணாலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் விநாயகர், உண்ணாமலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் அண்ணாமலையார் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் கொடி மரத்தின் எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் பத்து நாட்களுக்கு மாடவீதி உலா நடைபெறவுள்ளது மேலும் முக்கிய நிகழ்வான மகாதீபத் திருவிழா டிசம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.