திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்!

342

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்படும் என அதில் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.