திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த அண்ணாமலையாரை, வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம்!

413

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த அண்ணாமலையாரை, வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. இங்கு மலையை சிவனாக கருதுவதால் ஒவ்வொரு மாதம் புவுர்ணமி நாட்களில் பல லட்சம் பேர் கிரிவலம் வருவது வழக்கம். கார்த்திகை தீபத் திருவிழா முடிவடைந்து, இரண்டாம் நாளான இன்று அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். இதையொட்டி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன், நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலையார் கிரிவலம் வந்தார்.