திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் கைப்பற்றப்பட்ட 570 கோடி ரூபாய் பணம் ரிசர்வ் வங்கிக்கு…

439

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் கைப்பற்றப்பட்ட 570 கோடி ரூபாய் பணம் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது என சி.பி.ஐ. கூறியுள்ளது.
2016ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற இடத்தில் 3 கண்டெய்னர் லாரிகளை மடக்கி காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். லாரிகளில் 570 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி அனுமதியுடன் 570 கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதாக எஸ்பிஐ கடிதம் அளித்தது. இந்த விவகாரம் பல சந்தேகங்களை எழுப்பியதால், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் கைப்பற்றப்பட்ட 570 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது என சி.பி.ஐ. கூறியுள்ளது. கோவையிலிருந்து ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்ட போது பிடிப்பட்டதாக அந்த அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.