திருப்பூரில் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில், சபாநாயகர் தனபால் சிறப்புரை ஆற்றினார்.

318

திருப்பூரில் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில், சபாநாயகர் தனபால் சிறப்புரை ஆற்றினார்.

திருப்பூர் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக, பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மக்கள் நலனில் அக்கறை கொண்டு பாரம்பரிய திருவிழாவை தமிழக அரசு நடத்தி வருவதாகவும், சிறுதானிய உணவுவகைகளை உணவில் சேர்த்து கொண்டால், நோயின்றி வாழலாம் என்றும் அறிவுறுத்தினார். அத்துடன், குழந்தைகள் சிறுதானிய உணவுவகைகளை உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடு நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த விழாவில், சிறுதானிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உணவுத்திருவிழாவிற்கு வந்த பொதுமக்களுக்கு, பாரம்பரிய உணவு வகைகளின் பயன்கள் குறித்து அங்கன்வாடி மைய ஊழியர்கள் விளக்கினர்.