திருத்தம் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்….

177

திருத்தம் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்குப்பின் முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் ஆன முஸ்லிம் பெண்களிடம், மூன்று முறை தலாக் கூறி, உடனடியாக அவர்களை விவாகரத்து செய்யும் நடைமுறையை, மத்திய அரசு சட்ட விரோதமாக, அறிவித்துள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறை வேற்றப் பட்டுள்ளது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து, முத்தலாக் கூறியதற்காக கைது செய்யப்படும் நபருக்கு, ஜாமின் வழங்கலாம் என்ற வகையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதையடுத்து, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. திருத்தங்கள் கொண்டுவந்துள்ளதால் இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்குப்பின் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.