திருப்பதி அருகே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

294

திருப்பதி அருகே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பதி – காளஹஸ்தி இடையே ஏர்பேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு மணல் கொள்ளையை தடுக்க கோரி, காவல்நிலையம் அருகே 35க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று, பிரேக் பிடிக்காமல் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போராட்டக்காரர்கள் மீது மோதியதோடு, அங்கு நிறுத்தபட்டு இருந்த வாகனங்களையும் இடித்து தள்ளியது. இந்த விபத்தில் போராட்டக்காரர்கள் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விபத்தானது அப்பகுதியில் மணல் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் மணல் திருட்டு பலகாலமாக, நடந்து வருவதாகவும், இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.