திருப்பதியில் இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் அனுமதி பெற ஆதார் எண் கட்டாயம்!

894

திருப்பதி ஏழுமலையானை இரண்டு மணி நேரத்தில் தரிசிக்கும் முறைக்கு ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் 10 முதல் 12 ஆம் தேதி வரை சோதனை முறையில் நடைபெறும் அதி விரைவு தரிசனத்திற்கு 21 இடங்களில், 150 கவுண்டர்களை தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. இந்த கவுண்டர்களில், பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து, டோக்கனை பெறலாம். டோக்கன் பெற, ஆதார் அட்டை கட்டாயம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒருமுறை டோக்கன் பெற்ற பக்தர்கள், மீண்டும் 48 மணிநேரம் கடந்த பின்னரே அடுத்த டோக்கன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.