டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்சி தொடங்குவாரா? : திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டம்

554

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளன்று திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியமைத்தார். அதுமட்டுமன்றி தற்போது பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் 12-ம் தேதி அவருடைய பிறந்தநாள் அன்று கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. மாநாட்டில் புதிய கட்சியின் பெயர் கொடி, கொள்கை விவரங்களை ரஜினி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன் மீண்டும் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கலந்துரையாடல் நடத்துவார் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜசேகர் தலைமையில் முதற்கட்ட பணி நடைபெற்று வருகிறது.