திருச்சியில் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த இளைஞர் 3 ஆயிரம் அடி உயர மலையில், இருந்து தவறி விழுந்தார்!

841

திருச்சியில் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த இளைஞர் 3 ஆயிரம் அடி உயர மலையில், இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தலைமலையில் மிகவும் பழமை வாய்ந்த சஞ்சீவி பெருமாள் கோவில் உள்ளது. 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் பிரகாரத்தை மலை பாறைகளின் மீது ஏறி பக்தர்கள் சுற்றி வருவர். அவ்வாறு சுற்றி வரும் போது, இளைஞர் ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் உடனடியாக கோயில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். 3 ஆயிரம் அடி உயர மலையில் இருந்த தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.