திமுகவுக்கும், பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி உருவாகிறது – தம்பிதுரை

301

திமுகவுக்கும், பாஜகவுக்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதாகவும், ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்வதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.

மக்கள் குறை தீர்க்கும் முகாம் புதுக்கோட்டையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசில் உள்ள அமைச்சர்களும், பொறுப்பாளர்களும் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாக தெரிவித்த அவர், திமுகவுக்கும், பாஜகவுக்கும் கூட்டணி உருவாகிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு பாஜக உதவி செய்வதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.