ஸ்ரீரங்கம் ராப்பத்து உற்சவத்தின் நிறைவு விழா

113

ராப்பத்து உற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்வாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது… வைகுண்ட ஏகாதசியையொட்டி, இக்கோயிலில் பகல்பத்து, ராப்பத்து பத்து கொண்டாடப்படுவது வழக்கம்.. அந்த வகையில் தொடங்கிய பகல்பத்து நிகழ்வு, பெருமாளின் மோகினி அலங்கார சேவையுடன் நிறைவடைந்தது… இதையடுத்து கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த ராப்பத்து உற்சவ விழா நம்மாழ்வாரின் தீர்த்தவாரி கண்டருளி சேவை அலங்கார சேவையுடன் நிறைவடைந்தது… இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து பரவசமடைந்தனர்.இதேபோன்று சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்று ராப்பத்து உற்வ நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.