ஸ்ரீரங்கம் ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்வு

130

ராப்பத்து உற்சவத்தையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருக்கைத்தல சேவை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.வைகுண்ட ஏகாதசியையொட்டி, இக்கோயிலில் பகல்பத்து, ராப்பத்து பத்து கொண்டாடப்படுவது வழக்கம்.. அந்த வகையில் தொடங்கிய பகல்பத்து நிகழ்வு, பெருமாளின் மோகினி அலங்கார சேவையுடன் நிறைவடைந்தது.இதையடுத்து ராப்பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்வாக, பெருமாள் திருக்கைத்தல சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து பரவசமடைந்தனர்.