சத்துணவு பொருள்களை திருடும் ஊழியர்கள்

165

சத்துணவு பொருட்களை ஊழியர்கள் திருடி செல்வதை கண்டித்து திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பொருள்களை ஊழியர்களே திருடிச் செல்வதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் முறையிட்ட போது அவர்கள் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறத்தி முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் அனைவரும் களைந்து சென்றனர்.