பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

241

பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, இறந்த விவசாயின் உடலை வைத்து விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் லால்குடி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி. விவசாயியான இவர், குத்தகைக்கு நிலத்தை பெற்று விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று வயலுக்கு சென்ற அவர் பயிர்கள் கருகியிருப்பதை பார்த்து மனம் வருந்தி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். பின்னர் தகவல் அறிந்த வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் மருத்துவமனைக்கு சென்று விவசாயியின் கணவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் லெட்சுமியின் உடலை பெற்ற விவசாயிகள் லால்குடி சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.