பா.ஜ.க-வின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தி உள்ளது – மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

297

பா.ஜ.க-வின் வளர்ச்சி, தமிழகத்தில் மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தி உள்ளது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சென்னையில் நடந்த அமைதிப் பேரணி அழகிரியை திரும்பி பார்க்க வைத்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். பா.ஜ.க-வின் வளர்ச்சி தமிழகத்தில் மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தி இருப்பதாகவும், கட்சியை உடைப்பது பா.ஜ.க-வின் வேலை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் தங்கள் கட்சியை வளர்ப்பது தான் முதல் வேலை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.