முத்தரையரின் ஆயிரத்து 343-வது பிறந்த நாள் விழா

353

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் ஆயிரத்து 343-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சதய விழா என்ற பெயரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடை பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர் குமார், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, முத்தரையர் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, பல்வேறு முத்தரையர் சங்கத்தினரும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.