திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

93

கடத்தி வரப்பட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு சட்டவிரோதமாக தங்கம், போதைப்பொருட்கள் கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் பலக்கட்ட சோதனைக்கு பிறகே பயணிகள் விடுவிக்கப்படுகின்றனர். இந்தநிலையில், மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழங்கம்போல் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிரிஜா மலர் என்ற பெண்ணை சோதனை செய்தபோது, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 401 தங்கம் கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.