எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், திருச்சியில் இலவச பேருந்து சேவை இயக்கப்பட்டது.

226

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கட்டணம் இல்லா பேருந்து சேவை அதிமுக சார்பில் இயக்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதியும் கொடியசைத்து துவங்கி வைத்தனர். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இலவச பேருந்து பாலக்கரை வழியாக ஸ்ரீரங்கம் சென்று மீண்டும் ஜங்சன் பேருந்து நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.