நெடுஞ்சாலைத் துறையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்

291

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் முழக்கமிட்டு தண்டோரா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல், பணி நீக்கத்தால் மறைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் சாலைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான சாலைப் பணியாளர்கள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் 28ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சாலை பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அம்சராஜ் தெரிவித்தார்.