திருச்சி, மதுரை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ளது- விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர்!

392

திருச்சி, மதுரை மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் நூறு சதவீதம் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்தும் சுகாதாரப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட விஜயபாஸ்கர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி, மதுரை மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் நூறு சதவீதம் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாகவும், பத்து நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.