தேர்தல் அறிக்கை தயாரிக்க ப.சிதம்பரம் தலைமையில் குழு

162

திருச்சியில் புதிய தொழில் முனைவோருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அவர்கள் கூறும் ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இணைக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.