மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 காட்டெருமைகளை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

254

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 3 காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்தது. தண்ணீர் தேடி அலைந்த காட்டெருமைகள் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், காட்டெருமைகளுக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் 3 காட்டெருமைகளையும் பத்திரமாக மீட்டனர்.