திருச்சி தலைமலையிலிருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் உடல் மீட்பு!

1261

திருச்சியில் ஐந்தாயிரம் அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பெருமாள் ஆலயத்தில் ஆபத்தான முறையில் கிரிவலம் சென்ற இளைஞர் ஒருவர், 5 ஆயிரம் அடி உயர மலை உச்சியிலிருந்து கால் தவறி கீழே விழுந்தார். முசிறியை அடுத்த கமலபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி இரவு பகலாக நடைபெற்றது. இந்நிலையில், மலையடி வாராத்தில் ஆறுமுகத்தின் உடலை தீயணைப்புத்துறையினர் சடலாக மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.