வாய்க்கால் கரையோரம் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து தள்ளிய பொதுப்பணித்துறை அதிகாரிகள்

155

லால்குடி அருகே வாய்க்கால் கரையோரத்தில் இருந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து தள்ளினர்

திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சிக்குட்பட்ட மலட்டாறு வாய்க்கால் கரையோரத்தில் ஜல்லிக்கட்டு உணவு விடுதி மற்றும் சுகர் வணிக அடுக்குமாடி வளாகம் உள்ளது… இவற்றில் இருந்து வெளியாகும் கழிவுகள் அனைத்தும் மலட்டாறு வாய்க்காலில் கலக்கிறது. இதனால் நீர் நிலை மாசடைவதோடு, அதில் இருந்து வெளியாகும் துர்நாற்றத்தால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் இடித்து தள்ளினர்..