கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

165

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும், விமான நிலையங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 162 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரமாஸ்ரீ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.