தொடரும் தங்கம் கடத்தலால் திணறும் அதிகாரிகள்..!

524

திருச்சி விமான நிலையத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் தங்கக்கட்டிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக கடத்தப்படுகிறது. இதனை தடுக்க முடியாமல் சுங்கத்துறை அதிகாரிகள் திணறிவருகின்றனர். இந்நிலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த ஆயிஷாகனி என்ற பயணியிடமிருந்து 6 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 221 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தல் தங்கம் குறித்து அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.