திருச்சி விமான நிலையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

391

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமான மூலம், துபாயில் இருந்து வந்த பயணிகளிடம், சுங்கத்துறை வான்நுண்ணறிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த, சதா உசேன் என்பரிடம் சோதனை மேற்கொண்டபோது, 120 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவர் கடத்தி வந்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சதாம் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.